தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதி நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதால் இந்த ஆண்டு மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் தொப்பூர் கணவாய் போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இரட்டை பாலம் பகுதியில் நேற்று நடந்த கொடூர விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது அணிவகுத்து நின்ற வாகனங்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மிக முக்கிய நெடுஞ்சாலை பகுதியான அங்கு அடிக்கடி விபத்துகள் நடப்பது வழக்கமாகி விட்டது.
அதனால் ஆண்டுக்கு சரியாக நாற்பது பேர் என இந்த ஆண்டு இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து நடக்கும் விபத்துக்கு அரசு விரைவில் தீர்வு காண வேண்டும். இதற்கு விரைந்து அரசு முடிவு எடுக்காவிட்டால் இன்னும் சில விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகம் ஆகும். எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து செயல்பட வேண்டும்.