தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதால் சென்னையில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் கல்லூரிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. இதனையடுத்து கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் நடந்து வந்தன. அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் என 104 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் அது கல்லூரி வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து விடுதிகளில் மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் அறைக்கே சென்று ஊழியர்கள் உணவு வழங்கி வருகிறார்கள்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் மாதிரிகள் அனைத்தும் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அண்ணா பல்கலைகழக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களுக்குப் பிறகு கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்று மாணவர்களுக்கு பரவியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கல்லூரிகள் திறப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.