பல வருடங்களாக அனுமதியின்றி மதுபான விடுதி நடத்தி வந்த உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸ்விச் மாகாணத்தில் மதுபான விடுதி ஒன்று இயங்கி வந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அங்கு சென்று சோதனையிட்ட போது இவ்விடுதி தொழிற்பேட்டை பகுதிகளில் பல வருடங்களாக இயங்கி வந்துள்ளது என்பது தெரியவந்தது. மேலும் அங்கு சுமார் 80க்கும் மேலானோர் இருந்தனர். அவர்கள் எவரும் முகக்கவசம் அணியவில்லை மேலும் சமூக இடைவெளியும் கடைபிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமன்றி அங்கிருந்த ஒருவர் காவல்துறையினரயே எச்சரித்துள்ளார். அவர் இவ்விடுதியின் உரிமையாளராக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது. அவரையும் ,மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் விடுதியின் உரிமையாளர் காவல்துறையினர் யாரேனும் வருகிறார்களா என்பதை கவனிப்பதற்காகவே வேலைஆட்கள் நியமித்துள்ளார். இதனால் போலீசார் அங்கு செல்வதற்கு முன்னரே பாதி வாடிக்கையாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.