பிக்பாஸ்-4 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது .
பிக்பாஸ் -4 நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . கடந்த வாரம் டபுள் எவிக்சன் நடைபெற்று இருவர் வெளியேற்றப்பட்டனர் . இந்நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெறுகிறது . அதில் ஹவுஸ் மேட்ஸ் முன்னிலையில் ஒவ்வொரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற காரணத்தோடு இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும். ஏற்கனவே 2 புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் நாமினேஷன் முடிவுகளில் அர்ச்சனா குரூப்பில் உள்ள ரியோ ,அர்ச்சனா, சோம் ஆகிய மூவருமே நாமினேஷன் சிக்கியுள்ளது போல் தெரிகிறது. இதுகுறித்து ரியோ,சோம் ஆகியோரிடம் கார்டன் ஏரியாவில் கணக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறார் அர்ச்சனா .
#Day71 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/BmXeMw5Qs0
— Vijay Television (@vijaytelevision) December 14, 2020
அப்போது ஆரி ரியோவை நாமினேட் செய்தார். அனிதா- ரியோ,சோம் ஆகியோரை நாமினேட் செய்தார் .சிவானி பாலா ரம்யா ஆகியோரும் ரியோ , சோம் ஆகியோரை நாமினேட் செய்துள்ளதாக கூறுகிறார் . இதையடுத்து அர்ச்சனா ‘இப்போ தெரிகிறதா குரூப்பிஸம்ம் எங்கே இருக்குதுன்னு ? நம்பர் கேம் எங்கே இருக்குதுன்னு புரியுதா ?’ என்று சோம் மற்றும் ரியோவிடம் கூறுகிறார். ஆனால் அதே நேரத்தில் அர்ச்சனாவின் அன்பு அணியில் உள்ளவர்கள் அனிதா, பாலா, ஆரி ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது . இதிலிருந்து இந்த வாரம் அர்ச்சனா அணியில் மூவர் நாமினேஷன் சிக்கியுள்ளனர் என்பது தெரிகிறது . இவர்களில் ஒருவர் வெளியேற்றப்படுவரா ? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் .