Categories
மாநில செய்திகள்

மக்களே… 16 முதல் 18-ம் தேதி வரை… வானிலை மையம் எச்சரிக்கை..!!

தமிழகத்தில் வருகிற16 முதல் 18-ம் தேதி வரை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததுள்ளதாவது: –

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையும், கன்னியாகுமாரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இலேசான மழையும் பெய்யக்கூடும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 (15.12.2020) மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவும்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16.12.2020 முதல் 18.12.2020 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸைடியும் இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸையும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 1 செ.மீ மழை பதிவாகி வருகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |