Categories
சினிமா தமிழ் சினிமா

சசிகுமாருக்கு ஜோடியாக ரெண்டு ஹீரோயின்ஸ் … படத்தோட டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியுள்ளது .

தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி கதாநாயகனாக கலக்கி வருபவர் சசிகுமார் . இவர் நடிப்பில் தற்போது எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய திரைப்படங்கள் தயாராகியுள்ளது . இதையடுத்து சசிகுமார் நடிக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார் .

வாணி, சசிகுமார், பிந்து மாதவி

இந்தப் படத்தில் சசிகுமாருக்குஜோடியாக நடிகை வாணி போஜன் மற்றும் நடிகை பிந்து மாதவி ஆகியோர் நடிக்கவுள்ளனர் . 4மன்கிஸ் ஸ்டுடியோ தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘பகைவனுக்கு அருள்வாய்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது .

Categories

Tech |