நாளைய பஞ்சாங்கம்
15-12-2020, கார்த்திகை 30, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி இரவு 07.07 வரை பின்பு வளர்பிறை துதியை.
மூலம் நட்சத்திரம் இரவு 09.31 வரை பின்பு பூராடம்.
அமிர்தயோகம் இரவு 09.31 வரை பின்பு சித்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
முருக வழிபாடு நல்லது.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
நாளைய ராசிப்பலன் – 15.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு குழந்தைகளால் அலைச்சல் இருக்கும்.நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் அனுகூலம் உண்டாகும். தொழிலில் சிறு மாறுதல்களால் லாபம் உண்டாகும். தொழிலில் வேலைப்பளு நீங்கும்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு மனக் கஷ்டம் இருக்கும். ஆரோக்கியத்தில் மந்தநிலை உருவாகும்.உங்கள் ராசியில் சந்திராஷ்டமம் இருப்பதனால் சுப காரியங்களைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்
உங்களின் ராசிக்கு வியாபாரம் சீராக இருக்கும்.புதிய முயற்சிகளுக்கு வீட்டில் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் திறமைக்கேற்ற பலன் உண்டாகும். உறவினர் மூலம் சுப செய்தி கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சேமிப்பு பணம் இரட்டிப்பாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்வீர்கள். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள். சுபகாரியங்களில் அனுகூல பலன் இருக்கும். உடல் நலத்தில் முன்னேற்றம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும்.
சிம்மம்
உங்களின் ராசிக்கு உறவினர்களால் வீண் செலவு இருக்கும். பெரியவர்களின் விவாதத்திற்கு ஆளாவீர்கள். உடன் இருப்பவர்களால் வீன் தொல்லை இருக்கும். பிரச்சனைகள் உண்டாகும்.வியாபார விஷயத்தில் மேற்கொள்ளும் பயணம் அனைத்தும் நல்ல மாற்றங்களை கொடுக்கும். தெய்வ வழிபாடு நிம்மதி அளிக்கும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் ஒற்றுமை குறைய இருக்கும். தொழிலில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். வீண் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
துலாம்
உங்களின் ராசிக்கு ஆரோக்கியம் சீராக அமையும். சுப காரியங்கள் உண்டாகும். சகோதர சகோதரிகள் நட்பாக அமைவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் இருந்த பிரச்சினை தீரும். பூர்வீக சொத்துக்களில் லாபம் இருக்கும். தொழிலில் லாபம் திருப்தியை தரும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை நீங்கும்.நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கப் பெறும்.
தனுசு
உங்களின் ராசிக்கு வரவும் செலவும் சமமாக அமையும். வீட்டில் பெண் வழியில் மகிழ்ச்சி இருக்கும்.தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் நல்ல பலன் உண்டாகும் அனுகூலம் கிடைக்கும்.தொழிலில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் கூடும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல்நிலை சற்று மந்தமாக இருக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் அலைச்சலை கொடுக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயற்பட்டால் லாபம் உண்டாகும். புதிய பொருள் வாங்குவதில் கவனம் அவசியம்.
கும்பம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த வங்கிக் கடன் அமையும். நண்பர்கள் வழியில் உதவிகள் உண்டாகும். குழந்தைகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு தொழிலில் அவர்கள் திறமைக்கேற்ற பலன் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். உற்றார் உறவினர் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் புதிய திட்டம் வெற்றியை தரும். கொடுத்த கடன் அனைத்தும் வசூலாகும். வீட்டில் சுபகாரியங்கள் உண்டாகும்.