Categories
மாநில செய்திகள் வானிலை

அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை….. வானிலை ஆய்வு மையம் தகவல்……!!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கோத்தகிரியில் 4 செண்டி மீட்டர் மழை பெய்தது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Image result for கனமழை

மழை பொழியும் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அதே நேரத்தில் மழை பெய்யாத இடங்களில் கடுமையான வெப்பம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வெப்பநிலை அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |