Categories
உலக செய்திகள் டெக்னாலஜி பல்சுவை

BigBreaking: கூகிள் நிறுவன செயலிகள் முடங்கின ….!!

உலகளவில் யூடியூப் சேவை திடீரென முடங்கியுள்ளது. இந்த தகவலை யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் உறுதி செய்துள்ளது.

இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“உங்களில் பலருக்கு இப்போது YouTube ஐ அணுகுவதில் சிக்கல்கள் இருப்பதை நாங்கள் அறிவோம் – எங்கள் குழுவும் கண்டறிந்துள்ளது. இது குறித்து ஆராய்ந்து கோளாறை விரைவில் சரிசெய்து விரைவாக மீண்டும் சேவை வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |