Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அதிர்ச்சி…. 20 மீனவர்கள் கைது….. இலங்கை கடற்படை அட்டூழியம் …!!

எல்லை தாண்டி தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதாக இலங்கை  கடற்படையினர் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது இருக்கிறார்கள். கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இருபதுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்களின் 3 படகுகளையும் பறிமுதல் செய்து இருக்கிறது இலங்கை கடற்படை.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை தமிழ் மீனவர்கள் அந்நாட்டு கடற்படையின் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அத்துமீறி எல்லைதாண்டி மீன் வளத்தை அழிப்பதாக இலங்கை தமிழ் மீனவர்கள் அளித்த புகாரின் நடவடிக்கை என்ன என தகவல் வெளியாகி இருக்கிறது.

Categories

Tech |