பஞ்சாபில் சமீபத்தில் நடந்த திருமணத்தில் மொய் வேண்டாம் என்று சொல்லி, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு உதவுங்கள் என ஒரு திருமணத்தில் அறிவித்துள்ளது வைரலாகி வருகிறது.
டெல்லி விவசாய சட்ட மசோதாவை எதிர்த்து விவசாயிகள் தீவிரமாக போராடி வருகின்றனர். நாடு முழுவதும் இந்த போராட்டம் பல்வேறு விதமாக அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மொய் பணத்திற்கு பதிலாக டெல்லியில் விவசாயத்திற்காக போராடுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறப்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பஞ்சாபில் நடக்கும் திருமணத்தில் ஷாகுன் பணம் என்ற நடைமுறை உள்ளது. நம் ஊரில் மொய் பணம் என்று கூறுவர்.
ஒரு திருமண விழாவில் மொய் பணம் கொடுத்தவர்களை வேண்டாம் என்று கூறி, அதற்கு பதிலாக இந்த பெட்டியை வைத்துள்ளோம். அதில் உங்களது பணத்தை இதில் போடுங்கள், இந்தப்பணம் விவசாயிகளுக்கு உதவட்டும் என்று க கூறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வெளியான வீடியோ, போட்டோ வைரலாகி வருகிறது. டெல்லியில் நடக்கும் போராட்டத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்து வருகின்றன.
தன் மகளுக்கு திருமணம் நடக்கும் போது தந்தை அதில் கலந்து கொள்ளாமல் டெல்லி போராட்டத்தில் போராடி வந்துள்ளார். அவர் மகளின் திருமண விழாவை வீடியோ கால் மூலமாக பார்த்தார். இதுபற்றி அவர் கூறும்போது தனது மகளின் திருமணத்தை விட இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதே எனக்கு முக்கியம். டெல்லி விவசாய சட்ட மசோதாவிற்கு எதிராக நடக்கும் இந்தப் போராட்டத்தில் இரு தரப்பட்ட கருத்துகள் பரவி வருகின்றன. சிலர் விவசாய சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்திட்டு வருகின்றனர்.