இருசக்கர வாகனம் மோதி மினி பஸ் டிரைவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் மினி பஸ் டிரைவராக உள்ளார்.சம்பவத்தன்று வேல்முருகன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் வேல்முருகனின் மோட்டார் சைக்கிளின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் வேல்முருகன் நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் வேல்முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் வேல்முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.