துரோகம் செய்த காதலனுக்கு தன் முயற்சியால் பதிலடி கொடுத்த இளம்பெண், பலருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
பிரிட்டனிலுள்ள வேல்ஸை சேர்ந்த இளம்பெண் எமிலி டோனோவன்(24). பருமனான உடல் உடைய இவர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொள்ள இருந்தார். ஆனால் இவரது காதலன் எமிலிக்கு துரோகம் செய்தது தெரிய வந்துள்ளது. அதற்கு தன் உடல் பருமன் தான் காரணம் என்று அறிந்த எமிலி, அதனால் தனக்கு தன்னம்பிக்கை இல்லாமல் போவதையும் உணர்ந்தார். மேலும் தனக்கு இழைக்கப்பட்ட ஏமாற்றத்தை நினைத்து வருத்தப்படவில்லை. மாறாக தனது கவனத்தை உடற்பயிற்சியில் செலுத்த ஆரம்பித்தார். மேலும் தனது திருமணத்தையும் நிறுத்தி விட்டார். இதன் மூலம் தனது உடல் எடையையும் குறைத்துவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறும்போது:- முன்பெல்லாம் நண்பர்கள் மற்றும் காதலுடன் சேர்ந்து வெளியில் சென்று அதிகம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டிருந்ததால் உடல் பருமன் ஆனது. தற்போது வீட்டிலேயே சமைக்க கற்றுக் கொண்டு சாப்பிட்டு வருகிறேன் என்றார். முன்பு புகைப்படம் எடுக்க மறுத்து வந்த எமிலி, தற்போது மிகவும் அழகாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் உடல் எடை குறைத்ததை பற்றி மட்டுமே கூறியுள்ள அவர், முன்னால் காதலனை பற்றி எதுவும் தவறாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.