Categories
உலக செய்திகள்

முதல்முறையாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டது – மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி …!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ்சுக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் போராடி வருகின்றனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆய்வாளர்கள் தீவிர முயற்சி ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாகின.

சோதனை முயற்சியாகவே கொரோனா தடுப்பு மருந்து பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளதாக அதிபர் டொனால்டு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளார். உலக அளவில் அதிபரின் இந்த கருத்து மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ளது.

Categories

Tech |