தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஐந்து – ஆறு மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கூட்டணி குறித்த வியூகங்கள் வெற்றிக்கான திட்டமிடலில் அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளது.
ஏற்கனவே குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தொகுதியில் வெற்றி பெற்றார். அதன்பிறகு நடைபெற்ற மக்களவைத் தொகுதி பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தேர்தல் தொகுதி இடைத் தேர்தலிலும் அமமுக சார்பில் குக்கர் சின்னம் கேட்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னமே ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் குக்கர் சின்னம் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டதால் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.