மனநல பிரச்சனையால் 58 பெண்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிய மருத்துவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள மகளிர் நல மருத்துவர் டேனியல் ஹே (55) மகப்பேறு மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இவரது கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த பலருக்கு மருத்துவச் சிக்கல்கள் அதிகம் இருந்துள்ளது. அதை அவர் கவனிக்காமல் விட்டுள்ளார். இதன்படி அவரது சக மருத்துவர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் 2018 ம் வருடம் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இதே போல், கர்ப்பப்பையை அகற்றம் செய்த ஒரு பெண்ணின் குடல் வெட்டப்பட்டிருந்ததை அவர் கவனிக்காமல் விட்டுள்ளார். இது போன்று பலர் பல பிரச்சனைகளுக்கு உள்ளாகி இருக்கலாம் என்ற அடிப்படையில் காவல்துறையினர் அவரை விசாரித்து வருகின்றனர். இதில் 58 பெண்களின் மருத்துவ சிக்கல்களை அவர் கண்டுகொள்ளாதது தெரிய வந்துள்ளது. இதற்கு பதிலளித்துள்ள அவர் தனக்கு மனநலப் பிரச்சனை இருப்பதால், எனது பணியை ராஜினாமா செய்துவிட்டேன். என்னால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.