சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீயில் கருகிய நிலையில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பாரி. 47 வயதான இவர் கட்டிமான பொறியாளர். இவரது மனைவி ராஜமல்லிகா வயது (38) இவர்களுக்கு பாலமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். இன்று மாலை அவர் வசித்த இரண்டாவது மாடி வீட்டிலிருந்து புகை வெளியாகியிருந்திருக்கிறது. இதனால்அருகிலிருந்தவர்கள் கொடுத்த தகவலையடுத்து, கிண்டி தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். அதில் தந்தையும் மகனும் தீயில் கருகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரித்துவருகிறார்கள்.
கணவன், மனைவிக்கும் இடையே குடும்பதகராறு இருந்த வந்த நிலையில், அதே பகுதியில் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தாக கூறப்படுகிறது. பாரி இன்று காலைதான் மகனை மனைவியிடமிருந்து வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார். எனவே இந்த சம்பவம் போலீசாருக்கு பல்வேறு சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தீவிபத்து ஏற்பட்டதா அல்லது இருவரும் தீவைத்துக்கொண்டனரா அல்லது கொளுத்தப்பட்டுள்ளார்களா என பல்வேறுகோணங்களில் விசாரித்து வருகிறார்கள்.