சித்ரா தற்கொலை வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை காவல் துறையினர் கைதுசெய்தனர். கடந்த ஆறு நாள்களாக ஹேம்நாத்திடம் காவல் துறையினர் விசாரணை நடத்திவந்தனர்.
மேலும், நேற்று (டிச. 14) ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை நடத்தவுள்ள நிலையில், காவல் துறையினர் அவரைக் கைதுசெய்துள்ளனர். அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
மேலும் விசாரணையில் சித்ராவை நடிக்க வேண்டாம் என்றும் எந்த நடிகரும் நடனம் ஆடினார் என்று கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, நேற்று முன்தினம் (டிச. 13) சித்ராவின் தாய், தந்தை, சகோதரரிடம் வருவாய் கோட்டாட்சியர் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.