தமிழகத்தில் டிடிவி தினகரன் மற்றும் கமல்ஹாசன் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அவர்களுக்கான சின்னத்தை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு கட்சியினருக்கும் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்கியுள்ளது டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எளிதில் மக்களிடம் குக்கர் சின்னத்தை அறிமுகப்படுத்தி விடலாம் என்பதால் இது தினகரனுக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது. அதனைப் போலவே மற்ற கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதனைப்போலவே கமல்ஹாசனின் மக்கள் நீதி மைய கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.