சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவரை சாகும்வரை தூக்கிலிட தேனி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும், அவரின் மனைவி கற்பகவல்லிக்கும் மீது கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர் மனைவிக்கு கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு சூழ்நிலை ஏற்பட்டபோது மனைவியையும் மனைவி வயிற்றில் இருந்த 6 மாத சிசுவையும் கொலை செய்துள்ளார்.
அதனால் காரணமாக சின்னமனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, அதன் விசாரணையானது தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் இன்று நீதிபதி அப்துல் காதர் குற்றவாளிக்கு தண்டனை வழங்கியுள்ளார். அதில், தாயையும், தாயின் வயிற்றில் இருக்கும் 6 மாத சிசுவை கொலை செய்த குற்றத்திற்காக அவருடைய கணவர் சுரேஷ் என்பரை சாகும் வரை தூக்கிவிட வேண்டும் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.