நேற்றைய எபிசோடில் ரியோவின் மகளிடம் இருந்து வந்த தகவலை கன்பெக்சன் ரூமுக்குள் ரியோவிடம் கூறியுள்ளார் பிக்பாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ஆரியிடம் பேசிக்கொண்டிருந்த ரியோவை கன்பெக்சன் ரூமுக்கு வரச்சொன்னார் பிக்பாஸ். உங்களுக்கு ஐ லவ் யூ சொல்றதா? முத்தம் கொடுக்கிறதா? என தெரியல பிக்பாஸ் என்றார் ரியோ . பின்னர் ரியோவிடம் நல்லா விளையாடுறீங்க. நீங்க யார ரொம்ப மிஸ் பண்றீங்க ? என்றார் பிக்பாஸ் அதற்கு பதிலளித்த ரியோ பிரெண்ட்ஸ், வைஃப் மற்றும் மகள் ரித்தியை மிஸ் பண்றேன் என்றார் .
இதையடுத்து உங்கள் மகளிடம் இருந்து உங்களுக்கு ஒரு தகவல் வந்துள்ளது என பிக்பாஸ் கூற ,அழ ஆரம்பித்துவிட்டார் ரியோ . ‘செவுரை பிடிச்சி தத்தி தத்தி நடக்குறேன், அப்பா ன்னு முதல் முறையாக கூப்பிட்டு இருக்கிறேன் ‘என ரியாவின் மகள் சொல்வதாக சொன்னார் . இதைக்கேட்ட ரியோ ஐ லவ் யூ ரித்தி என்று அழுதுகொண்டே கூறினார் . மேலும் பிக்பாஸுக்கு நன்றி கூறி ஐ லவ் யூ பிக் பாஸ் என்றார் ரியோ . அதற்கு பிக்பாஸ் ‘வெல்கம் ரியோ லவ் யூ டூ’ எனக்கூறி மீண்டும் வீட்டுக்குள் செல்ல அனுமதித்தார்.