Categories
சினிமா தமிழ் சினிமா

பூஜையுடன் தொடங்கிய மிஷ்கினின் ‘பிசாசு- 2’… வெளியான தகவல்கள்…!!

இயக்குனர் மிஷ்கினின் ‘பிசாசு-2’ படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது .

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 இல் வெளியான திரைப்படம் ‘பிசாசு’ . இந்தப்படம் வழக்கமான பேய் கதைகள் போல் இல்லாமல் காதல் ,சென்டிமென்ட் என உணர்வுபூர்வமான காட்சிகளால் உருவாகியிருந்தது . இந்தப்படத்தில் நாகா,ராதாரவி, பிரியகா மார்டின் ஆகியோர் நடித்திருந்தனர் . சமீபத்தில் ‘பிசாசு -2’ தயாராவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது . இந்நிலையில் இயக்குனர் மிஸ்கின் ‘பிசாசு -2’ படத்தின் பணிகளை பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளார் .

Mysskin's next film Pisaasu 2 starring Andreah? Tamil Movie, Music Reviews  and News

இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் ‘சவரக்கத்தி’ பட  நடிகை பூர்ணா இணைந்துள்ளார் . இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு சிவா சாந்தகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் .

Categories

Tech |