சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் அனைவரும் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு பற்றி அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலை மீண்டும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் விலை ரூ.710 ஆக அதிகரித்துள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே டிசம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலையை 50 ரூபாய் உயர்த்தி இருந்த நிலையில், ரூ.660 ஆக இருந்தது. கடந்த 15 நாட்களில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகரித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்பதிவு செய்யும் போது பழைய விலையாக இருந்தாலும், புதிய விலைக்கே சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.