Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

மனநல பாதிப்பு…. தாயை கொன்ற மகன்… பின் எடுத்த முடிவு….!!

தாயை  கொன்று விட்டு மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் அருகேயுள்ள செருகுடியை சேர்ந்த தம்பதியினர் சுப்பிரமணியன்-மலர்கொடி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். இவர்களின் மூத்த மகன் பாலகிருஷ்ணன் சற்று மனநலம் குன்றியவர். நேற்று முன்தினம் இரவு பாலகிருஷ்ணன் தனது தாய் மலர்கொடியை  அரிவாளால் தலையில்  வெட்டியுள்ளார். பின்பு அவர் வீட்டில் உள்ள  மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று  காலையில் பக்கத்து வீட்டில் வசிக்கும் மலர்கொடியின் மற்ற 2 மகன்களும் தனது தாயையும் சகோதரரையும் தேடியுள்ளனர்.அப்போது வீட்டின் உள்ளேசென்று பார்த்த பொழுது இருவரும் இறந்து கிடந்துள்ளனர் . இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |