Categories
ஆன்மிகம் கொரோனா கோவில்கள்

ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி… சபரிமலையில் திடீர் பரபரப்பு… வெளியான தகவல்…!!!

சபரிமலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருவதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சபரிமலையில் 220க்கும் மேற்பட்டோர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். இதனால் அதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து சபரிமலையில் சிறப்பு பணிக்கு காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு பணியாற்றும் தேவஸ்தான ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள் மற்றும் ஓட்டல் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் என அங்கு இருக்கும் அனைவரையும் 14 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அதில் ஒரே நாளில் 18 போலீசார் உட்பட 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஹோட்டலில் வேலை பார்த்த 7 பேருக்கும்  கொரானா தொற்று  உறுதியானது. இதனால் சபரிமலையில் இதுவரை 220 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சபரிமலையில் கொரானாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த சன்னிதான சிறப்பு போலீஸ் அதிகாரியான பிரசாந் காணி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயல் அதிகாரியான சத்தியபாலன், விழா கட்டுப்பாட்டு அதிகாரி மதுசூதனன், கொரோனா முதல் நிலை சிகிச்சை மையம் மருத்துவ அதிகாரி பிரசாந்த் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

சபரிமலையில் பணியில் உள்ள அனைவரும் கட்டாயமாக 14 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரசாந்த் காணி கூறினார். மேலும் ஊழியர்களுக்கு நோய்த்தொற்று அறிகுறி இருப்பின் அவர்கள் உடனடியாக சிறப்பு பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களில் தொற்று இருப்பது தெரியவந்தால் கடையை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.சபரி மலையில் சிறப்பு பிரிவில் உள்ள ஊழியர்கள் முகக்கவசம் அணிவதோடு கைகளையும் சானிடைசர் பயன்படுத்தி  சுத்தமாக  வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |