அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கியது.
கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் தருவதற்கு எதிராக வழக்குகளும் போடப்பட்டன. ஆனாலும் ரூ.1,000 வழங்கப்பட்டது. ஆனால் அவை ஓட்டாக மாறவில்லை. அத்தேர்தலில் அதிமுக கூட்டணி தான் மெகா வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்த ஆண்டு பரிசு தொகுப்பு உடன் சேர்த்து புயல் நிவாரணம் என்ற பெயரில் ரூ. 2,000 வழங்கலாமா என்று ஆலோசிக்கின்றனர். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு ரூ.4000 கோடி கூடுதல் செலவாகும்.