Categories
சினிமா தமிழ் சினிமா

நரி கூட்டமா தான் வரும்ன்னு சொன்ன அர்ச்சனா… நான் செஞ்சு காட்டுறேன்னு சவால் விடும் ஆரி… குழப்பத்தில் ஹவுஸ் மேட்ஸ்…!!!

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கோழிப் பண்ணை டாஸ்க்கில் அர்ச்சனா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் நடக்கிறது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இனிவரும் டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கும் ‌ என தெரிகிறது. இந்நிலையில் இன்று வெளியான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கோழி பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் கோழிகள் தங்களுடைய தங்க முட்டைகளை நரிகளின் கை படாதவாறு பாதுகாத்து கொள்ள வேண்டும் .

அதேபோல் முட்டைகளை தொட வரும் நரியின் வாலை கோழிகள் பிடித்துவிட்டால் அந்த நரி சுற்றில் இருந்து வெளியேறி விட வேண்டும். தற்போது இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. இதில் ‘நரிகள் கூட்டமாக தான் வரும்’ என அர்ச்சனா கூற, ‘நான் செய்து காட்டுகிறேன்’ என்கிறார் ஆரி. ரம்யா ‘இது ரூல் புக்கில் இல்லை’ எனக்கூற சவால் விடுவது போல் ஆரி பேசுவதால் மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் உள்ளது போல் தெரிகிறது.

Categories

Tech |