சொந்த அக்காவை தன் கணவருடன் சேர்ந்து தங்கை கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாங்காடு காவல்நிலையத்தில் லட்சுமி என்பவர் புகார் ஒன்று கொடுத்திருந்துள்ளார். அதில், குழந்தைகள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் சிலர் தன்னுடைய வாயில் மதுவை ஊற்றி விட்டு தன்னை தாக்கியதாகவும், அதற்கு காரணம் தன்னுடைய அக்கா தெய்வானை என்றும் கூறியுள்ளார். மேலும் அதிகாலையில் அக்கா தெய்வானை வீட்டிற்கு சென்றபோது தெய்வானை கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்றும் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் லட்சுமியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது கடந்த சில வருடங்களாக வெளிநாட்டில் கணவருடன் தங்கி வேலை பார்த்து வந்த தெய்வானை சில மாதங்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் தங்கை லட்சுமியின் கணவர் ரமேஷ் குடித்துவிட்டு வந்து தகராறு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். எனவே தெய்வானை, தங்கை லட்சுமி மற்றும் அவருடைய கணவர் ரமேஷ் இருவரையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரமேஷின் பெற்றோரை தொடர்பு கொண்டு குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு சொத்து எதையும் கொடுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து தெய்வானையின் தயவில் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென வெளியேற்றப்பட்ட லட்சுமி மற்றும் அவருடைய கணவர் ரமேஷ் கடும் கோபமடைந்துள்ளார். இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற தம்பதியினர் இருவரும் அதிகாலை தெய்வானையின் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே சென்று தூங்கி கொண்டிருந்த தனது அக்கா தெய்வானை வாயை லட்சுமி பொத்திக்கொள்ள ரமேஷ் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதையடுத்து லட்சுமியை கைது செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள அவரது கணவர் ரமேஷ் தேடி வருகின்றனர்.