Categories
சினிமா தமிழ் சினிமா

கோபப்பட்டு பேசிய அர்ச்சனா… மனமுடைந்து பாலாவிடம் புலம்பும் ரியோ … வெளியான மூன்றாவது புரோமோ…!!

பிக்பாஸ் -4 நிகழ்ச்சியின் இன்றைய மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் -4 நிகழ்ச்சி 70 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மிக விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று போட்டியாளர்களுக்கு கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கோழி மற்றும் நரி என இரு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த டாஸ்க்கில் வெற்றிபெறும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என பிக்பாஸ் அறிவித்திருந்தார்.

இன்றைய எபிசோடுக்கான இரண்டு புரோமோக்கள் வெளியான நிலையில் தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது . அதில் அரச்சனா மற்றும் ரியோ இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதனால்  மனமுடைந்த ரியோ பாலாவிடம் புலம்புகிறார். இந்த டாஸ்கால் அர்ச்சனாவின் அன்பு அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது தெரிகிறது .

Categories

Tech |