நாளைய பஞ்சாங்கம்
16-12-2020, மார்கழி 01, புதன்கிழமை, துதியை திதி இரவு 04.54 வரை பின்பு வளர்பிறை திரிதியை.
பூராடம் நட்சத்திரம் இரவு 08.04 வரை பின்பு உத்திராடம்.
நாள் முழுவதும் அமிர்தயோகம்.
நேத்திரம் – 0.
ஜீவன் – 0.
சந்திர தரிசனம் .
இராகு காலம் மதியம் 12.00-1.30,
எம கண்டம் காலை 07.30-09.00,
குளிகன் பகல் 10.30 – 12.00,
சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
நாளைய ராசிப்பலன் – 16.12.2020
மேஷம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயல்களில் நல்ல பலன் உண்டாகும். வம்பு வழக்கு விஷயங்களில் சாதகம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். குழந்தைகள் பொறுப்பாக இருப்பார்கள்.
ரிஷபம்
உங்களின் ராசிக்கு எடுத்த காரியத்தை முடிக்க சிறு கால தாமதம் இருக்கும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் இழுபறி நிலையை இருக்கும்.உங்களின் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த விஷயத்திலும் நிதானத்துடன் இருப்பது நல்லதே தரும். பயணம் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
உங்களின் ராசிக்கு திறமைகள் வெளிப்படும் நாளாக இன்றைய நாள் இருக்கும். புதுப் பொலிவுடனும் தெம்புடன் இருப்பீர்கள். பொன்னும் பொருளும் வாங்குவதில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
கடகம்
உங்களின் ராசிக்கு வியாபார ரீதியில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய கருவிகளை வாங்க முயற்சி வெற்றியைத் தரும். தொழில் செய்பவர்களுக்கு பணிச்சுமை நீங்கும். சகோதர சகோதரி வழியில் அனுகூல பலன் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு வரவுக்கு மீறிய செலவு இருக்கும்.பூர்வீக சொத்துக்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூல பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த தடைகள் விலகும். உறவினர் வகையில் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். கடன் தொல்லை தீரும்.
கன்னி
உங்களின் ராசிக்கு வீட்டில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி பெருகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைக்க வாய்ப்பு கூடும். நண்பர்களின் உதவியால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் பெருகும்.
துலாம்
உங்களின் ராசிக்கு பொருளாதாரம் சீராக அமையும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கும்.சொத்து சம்பந்தமான விஷயங்களில் வெற்றி வாய்ப்பு கூடும். உடல் நிலையில் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
விருச்சிகம்
உங்களின் ராசிக்கு பணவரவு சீராக இருக்கும். குழந்தைகளால் வீண் விரயம் உண்டாகும். அலுவலகத்தில் தேவையில்லாத இடமாற்றம் உண்டாகும். வீட்டில் விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனைகள் தீரும். உத்தியோக வளர்ச்சிக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு உண்டாகும்.
தனுசு
உங்களின் ராசிக்கு உற்றார் உறவினர் வழியாக சுப செய்திகள் இருக்கும். குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலில் சிலருக்கு உயர் பதவிகள் உண்டாகும். உத்தியாக விஷயங்களில் வெளியூர் பயணம் செல்லக் கூடும். பண வரவு சீராக அமையும்.
மகரம்
உங்களின் ராசிக்கு உடல்நிலையில் சோர்வும் மந்தமும் அதிகம் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். குடும்ப செலவை சமாளிக்க கடன் வாங்க கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும்.
கும்பம்
உங்களின் ராசிக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் இருக்கும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு நீங்கும்.உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவு கிடைக்கும். வியாபார ரீதியில் பொருளாதாரம் சீராக அமையும். உறவினர்களால் அனுகூல பலன் கிடைக்கும்.
மீனம்
உங்களின் ராசிக்கு செய்யும் செயலில் சுறுசுறுப்புடன் இருப்பீர்கள். உற்றார் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி சூழ்நிலை இருக்கும். நண்பர்களின் உதவியால் எதிர்பார்த்த இடத்திலிருந்து வங்கிக் கடன் கிடைக்கும். உத்தியோகம் சம்பந்தமாக வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். கடன் தொல்லை தீரும்.