Categories
தேசிய செய்திகள்

4 லட்சம்… பெத்த பிள்ளையை பெற்றோரே… 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை..!!

மத்திய பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை பெற்றோர், நான்கு லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று மாலை போபாலில் 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உஜ்ஜைனில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய காவல்துறை எஸ்பி உஜ்ஜைனில் வாசிக்கும் சிறுமி நவம்பர் மாதம் ராஜஸ்தானை சேர்ந்த உதயப்பூருக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு அவளுக்கு திருமணம் செய்யப்போவதாக பெற்றோர் சொன்னபோது அந்த சிறுமி ஆட்சேபனை தெரிவித்து உள்ளார். ஆனால் அவளுக்கும் ஒரு நபருக்கும் நவம்பர் 24ஆம் தேதி உதயப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் திருமணம் நடந்தது.

அதன்பிறகு அந்த சிறுமியை திருமணம் செய்த நபர் உடன் விட்டுவிட்டு பெற்றோர் மீண்டும் உஜ்ஜைனிற்கும் வந்தனர். அதன்பின் அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது பெற்றோர் ரூபாய் 4 லட்சத்திற்கு தன்னிடம் விற்றதாக கூறினார். டிசம்பர் 8-ஆம் தேதி, அந்த சிறுமி ஒருமுறை தனது பெற்றோரை பார்க்க ஊருக்கு அழைத்துச் செல்லும்படி அந்த நபரிடம் கேட்டாள். அதைத் தொடர்ந்து அந்த நபர் அவளை உஜ்ஜைனிக்கு அழைத்து வந்தார்.

நேற்று அவர் அவளை மீண்டும் உதய்பூருக்கு அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால் சிறுமி தனது அத்தையை தொடர்பு கொண்டு நடந்து விவரங்களைக் கூறியுள்ளார். தொடர்ந்து அச்சிறுமியின் அத்தையை எங்களுக்கு தகவல் கொடுத்தவுடன் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். அந்த பெண்ணின் தந்தை, திருமணம் செய்த நபர், 2 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கீழ் அவர்களை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |