நீலகிரி அருகே +2 மாணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருடைய மகன் சஞ்சித் குமார். இவர் அங்குள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார் . பல வருடங்களுக்கு முன்பு சம்பத்குமார் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வந்தார். இதனால் சஞ்சித் குமார் அவரது தாயார் மற்றும் அவருடைய சகோதரி ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.
தனது தந்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் சஞ்சித்குமார் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் . இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு சென்ற அவர் மாலை 7 மணி அளவில் அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் சஞ்சித் குமார் வெளியே வராததால் சந்தேகமடைந்த அவரது தாயார் அறையின் கதவை தட்டியுள்ளார்.
கதவு திறக்கப்படாததால் பதறிய அவர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியோடு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது ரஞ்சித்குமார் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார் .இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சஞ்சித் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.