Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கை” கண்டம் விட்டு கண்டம்…. பாயும் பாக்டீரியாக்கள்…. ஆய்வாளர்கள் தகவல்…!!

பாக்டீரியாக்கள் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து நோய் பரவ வழிவகுக்கப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகில் பாக்டீரியாக்கள் கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. வளிமண்டலத்தில் இந்த பாக்டீரியாக்கள் மறைந்திருந்து ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு பயணிக்க முடியும் என்று கிரானாடா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை Atmospheric Reasearch என்ற இதழில் வெளியாகியுள்ளது. இந்த இதழில், பாக்டீரியா நுண்ணுயிர்கள் மற்ற கண்டங்களுக்கு நகர்ந்து செல்வதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பாக்டீரியாக்கள் நகர வளிமண்டல துகள்கள் ஒரு ராக்கெட் போல பயன்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் இது ஒரு கண்டத்திலிருந்து மற்றொரு கண்டத்திற்கு நோய்கள் பரவ வழிவகுக்கும் என்றும் ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் பல பாக்டீரியாக்கள் நகரும் வளிமண்டல துகள்களை மனிதர்கள் மூச்சு வழியாக சுவாசிக்க முடியும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணுயிரிகள் பல மினரல்களால் உருவாகியுள்ளன. இதன் அளவு 400 மைக்ரான்கள் ஆகும். 2008 ஆம் வருடத்தில் வளிமண்டல துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் இந்த துகள்கள் உருவாவதில் பாக்டீரியாக்களுக்கு என்ன பங்கு என்பது இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இந்த வளிமண்டல துகள்கள் பூமி முழுவதும் பரவி இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |