Categories
தேசிய செய்திகள்

எண்ணெய் வர்த்தகம் பற்றி பேச இந்தியா வந்த ஈரான் வெளியுறவு அமைச்சர்.!!

ஈரான் எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா அளித்த விலக்கு முடிவடைந்துவிட்ட நிலையில், இந்தியாவுடன் பேச்சு வார்த்தை  நடத்துவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வந்துள்ளார்.

அமெரிக்கா ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதையடுத்து அந்நாட்டிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு  இந்தியா, சீனா, தைவான், இத்தாலி, கிரீஸ் உள்ளிட்ட 8 நாடுகளுக்கு மட்டும் அமெரிக்கா விலக்கு அளித்திருந்தது. இந்த விலக்கு கடந்த மே ஒன்றாம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. அதேசமயம், அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளால், ஈரானின் சர்வதேச கச்சா எண்ணெய் வர்த்தகம் முடங்கி வருகிறது. இதனால் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி (Hasan Rouhani) தெரிவித்துள்ளார்.

Image result for Javad Zarif

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை 7 நாடுகள் நிறுத்தி விட்ட நிலையில் இந்தியாவும் நிறுத்திவிட்டால் அந்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி மேலும் அதிகரிக்கும். இந்நிலையில், இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவதற்கு ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவேத் ஷரீஃப்  (Javad Zarif) இந்தியா வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் பேச்சுவார்த்தை  நடத்தவுள்ளார்.

Categories

Tech |