Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தினமும் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!!

 தினமும் வெறும் வயிற்றில் சூடான நீரை குடிப்பதால் என்ன நன்மை ஏற்படுகின்றது என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம் :
மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் அவதிபடுவார்கள். அந்த சமயத்தில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால் மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாகக் குறையும்.
உடற்பயிற்சி மையத்திற்கு சென்று போராடாமல் எளிதில் உடல் எடையை குறைக்க சிறந்த வழி வெந்நீர் குடிப்பதுதான்.
மதிய நேர சாப்பாட்டிற்குப் பின் சிறிது வெந்நீர் பருகினால் இதயத்தில் சேரக்கூடிய தேவையற்ற கொழுப்புக்களை அகற்றிவிடும் ஆற்றல் கொண்டது.
காலை வேளையில் மலம்  வரவில்லையா ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எல்லாம் சரியாகிவிடும்.
கால் பொறுக்கும் அளவுக்கு வெந்நீரை ஒரு டப்பில் விட்டு, அதில் கல் உப்பையும் போட்டுக் கலக்கவும். அந்த வெந்நீரில், கால் பாதங்களைப் பதினைந்து  நிமிடங்கள் வைத்து எடுத்தால் கால் வலி குறையும்.
 பித்தவெடிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் கால் பாதங்களை வைத்து எடுத்த பிறகு, பாதங்களை பியூமிஸ் ஸ்டோன் கொண்டு தேய்த்தால், நாளடைவில் பித்த வெடிப்பு  குணமாகி விடும்.

Categories

Tech |