நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ படப்பிடிப்பில் நடிகை காஜல்அகர்வால் கணவருடன் கலந்து கொண்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். மாலத்தீவில் தேனிலவை முடித்து விட்டு மும்பை திரும்பிய காஜல்அகர்வால் விரைவில் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார் . இந்நிலையில் தற்போது நடிகர் சிரஞ்சீவியின் ‘ஆச்சரியா’ படப்பிடிப்பில் காஜல் அகர்வால் தன் கணவருடன் கலந்துகொண்டுள்ளார் . இதையடுத்து படக்குழுவினர் கௌதம் – காஜல் தம்பதிக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர். மேலும் படப்பிடிப்பு தொடங்கும் முன் கேக் வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் காஜல்அகர்வால்.