Categories
தேசிய செய்திகள்

“மம்தாவை விமர்சித்து மீம்ஸ்” பாஜகவின் பிரியங்கா சர்மா_வுக்கு ஜாமீன்…. உச்ச நீதிமன்றம் அதிரடி…!!

மேற்கு வங்க முதல்வர் மம்தாவை விமர்சித்து மீம்ஸ் வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட பாஜக கட்சியை சார்ந்த பெண் நிர்வாகிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தினை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துள்ள உடையுடன் இணைத்து, அவதூறு பரப்பும் வகையில் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் மேற்கு வங்க மாநில அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியது.

கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி பிரியங்கா சர்மா தனது கைது  நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்குவதாக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.மேலும் இந்த வழக்கில் பிரியங்கா சர்மா  விடுதலையானவுடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |