தேர்தல் பிரசாரத்தில்பாதுகாப்புக்காக போலீசார் அமைத்திருந்த தடுப்பை தாண்டிக் குதித்துச் சென்று பிரியங்கா காந்தி மக்களைச் சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது.
மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற இருக்கும் மக்களவை தொகுதிகளில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரட்லம் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசாரத்தில் பிரியங்கா காந்தி மக்கள் கூட்டத்தினரிடம் இருந்து பிரித்து தடுப்புகளை அமைத்து பாதுகாப்பாக அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவர் திடீரென தடுப்பு வழியாக ஏறிக் குதித்து அவர் மக்களை சந்தித்தார். பிரியங்கா காந்தி தடுப்பின் மீது ஏறிக் குதித்து சென்றதால் பாதுகாவலர்களும் வேறு வழியின்றி தடுப்பின் மீது ஏறிக் குதித்து பிரியங்கா காந்திக்கு பாதுகாப்பு அளித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.
#WATCH Priyanka Gandhi Vadra, Congress General Secretary for Uttar Pradesh (East) hops over a barricade to meet supporters during a public meeting in Ratlam, Madhya Pradesh. (13.5.19) pic.twitter.com/9pPnxOJn1k
— ANI (@ANI) May 14, 2019