நாளை முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பைக் கட்டுப்படுத்த தொடர்ந்து அமலிலிருந்த ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டன. இதனடிப்படையில் நாடு முழுவதும் சினிமாத்துறை, கல்வித்துறை, தொழில்துறை உட்பட பல துறைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த வரிசையில், புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படும் என்று அம்மாநில உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இளநிலை, முதுநிலை படிப்புக்கான இறுதி ஆண்டு வகுப்புகள் நாளை முதல் (டிசம்பர் 17) நடைபெறும் என்று அறிவித்துள்ளது.