தொழில்நுட்பம் வளர வளர அனைத்து நாடுகளிலும் ஏராளமான விஷயங்கள் ஆன்லைனை நோக்கி நகர தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் பல விஷயங்களுக்கு ஆன்லைன் பயன்பாட்டை நாம் உபயோகிக்க ஆரம்பித்து விட்டோம். இந்த டிஜிட்டல் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக ரிலையன்ஸ் தரப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ சிம்மை கூறலாம். ஜியோ சிம் வந்த பிறகு நெட்வொர்க் துறையிலும் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.
மக்கள் அனைவரும் டிஜிட்டல் இந்தியாவை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டார்கள். இந்நிலையில் ஆன்லைனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்களை போல நடுத்தர வியாபாரிகளும் ஆன்லைனில் தங்களது பொருட்களை எளிதில் சுலபமாக விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஃபேஸ்புக் நிறுவனமும், ரிலையன்ஸ் நிறுவனமும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, பேஸ்புக் நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர்பெர்க் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியுடன் கலந்துரையாடினார். அப்போது, சிறு வியாபாரிகளுக்கு உதவி செய்வதே ஃபேஸ்புக்கில் எங்களின் நோக்கம். இந்தியாவை தவிர சிறந்த இடம் இதற்கு இருக்கவே முடியாது. வருகின்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஜியோ பிளாட்பார்மில் 9.99 சதவீத பங்குகளை வாங்க ரூபாய் 43 ஆயிரத்து 574 கோடி முதலீடு செய்வதாக மார்க் ஜூகர்பெர்க் தெரிவித்துள்ளார்.