Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால் குண்டுமணி அளவாவது நன்மை இருக்குதா ? திண்டுக்கல் சீனிவாசன் மீது விமர்சனம் ..!!

நேற்று திண்டுக்கல்லில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை கடுமையாக விமர்சனம் செய்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் மீட்போம் என்ற பெயரில் திமுக நடத்தும் சிறப்பு பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் முக. ஸ்டாலின் நேற்று திண்டுக்கல் மாவட்ட தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர், திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் சீனிவாசனை கடுமையாக சாடினார்.  திண்டுக்கல்லுக்கு அமைச்சர் என்று சீனிவாசன் இருக்கிறார். அவரால் இந்த நாட்டிற்கு கிடைத்த ஒரே நன்மை அம்மா இட்லி சாப்பிட்டார் என்பதெல்லாம் பொய். நாங்கள் நாட்டிற்கு பொய்தான் கூறினோம். சீனிவாசன் கூறியது மட்டும் தான் இந்த நாட்டிற்கு கிடைத்த நன்மையே தவிர வேறு எதுவும் இல்லை.

திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் ஐந்து வருடங்களாக இந்த தொகுதிக்கு என்ன நன்மையை செய்தார் என்பதை சொன்னால் நான் என்னைத் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறேன். திண்டுக்கல்லை மாநகராட்சி என அறிவித்தார்கள் அதற்கான அடிப்படை வசதிகளை செய்ய நிதி எவ்வளவு ஒதுக்கினார்கள் என்பதை சீனிவாசன் சொல்லமுடியுமா? திண்டுக்கல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்தனர். அந்த திட்டப்படி என்னவெல்லாம் செய்து தரப்பட்டது? அவரால் அதனை பட்டியலிட முடியுமா?

திண்டுக்கல் மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார். அதனை செய்தாரா? திண்டுக்கல்லை சுற்றி இருக்கும் குளங்களை தூர்வாரி விட்டாரா? இல்லை சென்று பார்த்தால் தான் தெரியும் பெரும்பாலான குளங்கள் சாக்கடை நீராக தான் உள்ளது . திண்டுக்கல் பேருந்து நிலையத்தை கூட இதுவரை புதுப்பிக்கவில்லை. அதற்கான காரணம் என்ன? பத்து வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் முழுமையாக முடிக்கப்படாமல் இன்னும் இழுத்துக் கொண்டு செல்வதற்கு காரணம் என்ன?

இதற்கெல்லாம் திண்டுக்கல் சீனிவாசன் என்ன பதில் கூறுவார்? அவர் பெயரில் இருக்கும் திண்டுக்கலுக்கு ஒரு குண்டுமணி அளவாவது நன்மை செய்து இருப்பாரா? நான் இப்போது கேட்ட கேள்வி எல்லாம் திண்டுக்கல் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள். தேர்தல் பிரச்சாரத்திற்கு வரப்போகும் சீனிவாசனிடம் மக்கள் கேட்கிறார்கள். விவசாயி என்று தம்பட்டம் அடிப்பது விவசாயிகளுக்கு என்ன பயன்? நான் கிராமத்தில் பிறந்தவன் என்று கூறுவதால் கிராமத்து மக்களுக்கு என்ன பயன்? நான் விவசாயி என்றும் நான் கிராமத்தை சேர்ந்தவன் என்றும் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் விவசாயிகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் என்ன செய்தார்? அதை சொல்ல வேண்டாமா?

Categories

Tech |