Categories
அரசியல் மாநில செய்திகள்

இது புதுசு அல்ல பழசு தான்… கல்வி அல்ல காவி…. மோடி அரசை விளாசிய ஸ்டாலின் …!!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்வி கொள்கை குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட முக.ஸ்டாலின்,  மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கைகள் கொண்டுவரப்பட்டது. புதிய கல்விக் கொள்கை அல்ல, பழைய கொள்கையை புதியது என பொய் கூறினார்கள். அது கல்விக் கொள்கையை இல்லை காவி கொள்கை. 3, 5, 8, 10, 12 என அனைத்து வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைப்பதால் குறைந்தபட்ச கல்வித்தகுதியை கூட ஏழை மாணவர்கள் பெறுவதற்கு தடை ஏற்படுத்த பார்க்கிறார்கள். நீட் தேர்வை போல அனைத்து படிப்புகளுக்கும் தேர்வு வைத்து தடை ஏற்படுத்த பார்க்கிறார்கள்.

தொலை கல்வியை மீட்டெடுக்க பார்க்கிறார்கள். ஆனால் அந்த கல்வித் திட்டத்தை தலையாட்டி ஏற்றுக்கொண்டது எடப்பாடி அரசு. புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிக்கிறார்கள்.  மத்திய அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பொதிகை தொலைக் காட்சிகளை எதற்காக சமஸ்கிரதத்தில் செய்தி ஒளிபரப்ப வேண்டும். சமஸ்கிருதம் என்பது இந்தியாவின் ஆட்சி மொழியா அல்லது பெரும்பான்மையான மக்கள் பேசும் மொழியாயா ? ஏன்  சமஸ்கிருதத்தை திணிக்கிறார்கள்.

இன்று  மத்திய அரசு நடத்தும் எந்த தேர்வாக இருந்தாலும் அது வடமாநில மக்களுக்கு நன்மை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அஞ்சல் தேர்வு ரயில்வே தேர்வு அனைத்துமே இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது. இதைப்பற்றி எடப்பாடி அரசு கவலைப்படுவது இல்லை. மத்திய அரசு பணிகளாக இருந்தாலும் அதில் அந்தந்த மாநிலங்களுக்கு முழு உரிமை உண்டு. அதைப் பெறுவதற்கான உரிமை அந்த மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் உண்டு.

இந்தத் தேர்வுகளை எதற்காக ஹிந்தியில் மட்டும் நடத்துகிறீர்கள் என்று எடப்பாடி அரசு கேட்டதா? அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தத் தேர்வு நடத்த வேண்டும் என்று பழனிச்சாமி அரசு என்றாவது கோரிக்கை வைத்ததா? தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்ல தைரியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதா? யார் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று  ஒரு முதலமைச்சரால் எப்படி இருக்க முடியும் . சிறுபான்மை சமூகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகின்ற குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கூச்சமே இல்லாமல் மசூதிக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு  இப்போது எப்படி முடிகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே தோற்று போயிருக்கும். நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த சட்டத்தை குப்புற விழுந்து ஆதரித்த அந்த பழனிச்சாமியை சிறுபான்மையினர் மட்டுமில்லை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என முக.ஸ்டாலின் மத்திய – மாநில அரசை விமர்சித்தார்.

Categories

Tech |