Categories
லைப் ஸ்டைல்

தினமும் உணவில் வெங்காயம் சேர்ப்பது…. எதற்காக தெரியுமா…?? அறியாத சில நன்மைகள்…!!

வெங்காயம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்று இப்போது பார்க்கலாம்.

வெங்காயத்தில் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த வெங்காயத்தை நாம் பச்சையாக சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்குக் கிடைக்கின்றன. உடல் சூடு அதிகரிக்கும் போது வெங்காயம் அதை சமப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு. சாதாரண தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குறைந்துவிடும். வெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள் மற்றும் குளவி போன்ற விஷப்பூச்சிகள் கடித்த இடத்தில் அழுத்தி தேய்த்தால் வலி குறையும் .

வெங்காயத்தின் சில பயன்கள்:

பொதுவாக இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் அடையும்.

மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது. தினமும் ஒரு வெங்காயத்தை சூப்பாக செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு தூங்குவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது.

வெங்காயத்தை வேக வைத்து தேன் கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவது உண்டு. அப்போது வலியும், எரிச்சலும் கடுமையாக இருக்கும். இதற்கு சுடுநீரில் வெங்காயச் சாற்றைக் கொண்டு வாய் கொப்பளிக்கலாம்.

தோல் மற்றும் தலைமுடி ஆரோக்யமான வளர்ச்சிக்கு உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு ஒவ்வாமை பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

இதில் கொழுப்புச்சத்து மிக குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைக்க விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் சேர்த்துக்கொள்ளலாம்.

ரத்த விருத்திக்கும், இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால் உடல் அழகு ஏற்படுகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.

Categories

Tech |