Categories
தேசிய செய்திகள்

“சம்பளம் உயர போகுது” அரசு ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ்… எப்ப இருந்து தெரியுமா..?

கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படியை மீண்டும் தர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி தரும் மத்திய அரசு 21 சதவீதமாக உயர்த்தி தர ஏற்பாடு செய்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. 24 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு இந்தியா பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மாநில அரசின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையை பிடித்தம் செய்தது. அதேபோல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை பிடித்தம் செய்தது. தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தபின் அனைத்து நிறுவனங்களும் பழைய திரும்பி உள்ளதால் மத்திய அரசின் வருவாய் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக அகவிலைப்படியை 6 சதவீதம் உயர்த்தி உள்ளது. 2021 ஜூன் மாதத்திற்கு பிறகு டி.ஏ மூலம் அரசாங்கம் நிவாரணம் கூடுதல் அளிக்கின்றன. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நம்பிக்கை அடைந்துள்ளனர். அப்படி நடந்தால் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் இரண்டு மடங்கு அதிகரிக்கும். மத்திய அரசு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் டி.ஏ அதிகரிக்க ஏழாவது ஊதியக்குழு அமலுக்கு வருவதால் ஊதியம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறுவார்கள்.

Categories

Tech |