புற ஊதா கதிர்களை கொண்டு கொரோனா வைரஸை வீட்டிலேயே அழிக்கலாம் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸால் கடந்த ஓராண்டு காலமாக உலக மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக, கொரோனாவை அழிக்க சானிடைசர் மற்றும் சோப் உள்ளிட்டவை பயன்படுத்தப்படுகின்றன. இதுபோக, தற்போது புற ஊதாக் கதிர்கள் மூலம் அழிக்கப்பட்டு வருகிறது. இந்த புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனாவை விரைவாகவும் எளிதாகவும் கொல்லும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒளிவேதியியல் மற்றும் ஒளிஉயிரியல் நடத்திய ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குறித்து இணை ஆசிரியரான ஹதாஸ் மமனே கூறுகையில், “கொரோனா வைரஸ் கிருமியை அளிப்பதற்கு உலகம் முழுவதும் தற்போது பயனுள்ள தீர்வுகளை தேடுகிறது. அந்த வகையில் புற ஊதா எல்.இ.டி.க்கள் கொரோனா கிருமிகளை அழிப்பதில் பயனளிக்க வல்லது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்தி கொரோனா வைரசை வீட்ட்டிலேயே மிக எளிதாகவும் அதே சமயத்தில் விரைவாகவும் கொல்ல முடிகிறது” என்று கூறியுள்ளார்.