பணபரிமாற்றத்தை குறைப்பதற்காக தற்போது இந்திய தபால் துறையால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு புதிய செயலி அறிமுகமாகியுள்ளது.
ரூபாய் நோட்டுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக மின்னணு முறையிலான பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கூகுள் பே, பேடிம், போன்பே என பல்வேறு செயலிகள் அறிமுகம் ஆகின. இந்த நிலையில், இந்திய தபால்துறை மற்றும் இந்திய தபால்துறை வங்கி சார்பிலும் தற்போது புதிதாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த இரண்டும் இணைந்து டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு DakPay என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளன. இதன் மூலம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்துவது, மற்றவரின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்புதல், கடைகளில் QR ஸ்கேன் செய்து பணம் செலுத்துவது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை பெறலாம். இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் சேவையையும் இது வழங்கும்.