கமலே வந்து கேட்டாலும் டார்ச்லைட் சின்னத்தை கொடுக்க நான் தயாராக இல்லை என்று எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் டார்ச் லைட் சின்னம் தனக்கு வேண்டும் என்று கேட்ட போதிலும் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படவில்லை. அவர் சின்னம் எம்ஜிஆர் மக்கள் கட்சியின் தலைவர் விஸ்வநாதன் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கமலுக்கு வரவேண்டிய டார்ச்லைட் சின்னம் இப்ப இவரு கிட்ட தான் இருக்கு. இதுபற்றி விஸ்வநாதன் கூறுகையில், “கமலே வந்து கேட்டாலும் டார்ச்லைட் சின்னத்தை நான் கொடுக்க தயாராக இல்லை. கமலுக்கே நான் டார்ச்லைட் அடிப்பேன்” என்று அவர் கூறியுள்ளார்.