டெல்லியில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு நடிகர் மெட்ரோ சிரிஷ் ஆதரவு தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் மெட்ரோ சிரிஷ் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஆசிரியர்கள் போராடும்போது வகுப்பறைகள் இயங்குவதில்லை. ஓட்டுநர்கள் போராடும்போது பேருந்துகள் ஓடுவதில்லை. ஆனால் விவசாயிகள் போராடும்போது மக்களுக்கு உணவு வழங்க மாட்டோம் என்று ஒருபோதும் அவர்கள் சொல்வதில்லை..”என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.