அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக சமூக வலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவி வரும் செய்தி போலியானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சில தினங்களாக அரசு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குகிறது.அதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும் என குறிப்பிட்டு ஒரு இணையதள முகவரியும் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த குறுஞ்செய்தி பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர். உங்கள் பகுதியில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவி கிடைக்கட்டும் அதிகம் பகிரவும் என குறிப்பிட்டு இணையதள முகவரி பரப்பப்பட்டது.
இந்நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரசுக்கு சொந்தமான பிஐபி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த தகவல் முற்றிலும் போலியானது, இது போன்று அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என உறுதிப்படுத்தி உள்ளது