லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஷ்ரம் பள்ளி வளாகத்தை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் செயலாளராக உள்ள ஆஸ்ரம் பள்ளி வளாகத்தை காலி செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை அதை மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுமார் 2 கோடி வரையில் வாடகை பாக்கியை கேட்டு நில உரிமையாளர்கள் அப்பள்ளி மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி வளாகத்தை காலி செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளனர். மேலும் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என்றும் அப்பள்ளிக்கு தடை விதித்துள்ளது.